வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ரோபோட்டிக் அறையை அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்போது, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகள், புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் அருகே புளியமங்கலத்தில் செயல்பட்டுவரும் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ரோபோட்டிக் வகுப்பறை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்மார்ட் வகுப்பையும் அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி துவக்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ரோபோட்டிக் வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கண்டுபிடிப்புப் திறன் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வகுப்புகள் மூலம், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகதித்து வருகிறது. இந்த துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.