கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதிக்கு வட மாநிலத்தவர்கள் குடும்பம், குடும்பமாக வருகை தந்து வீட்டு உபயோக கருவிகள் மற்றும் உழவுக்கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இவர்கள் சாலை ஓரத்திலேயே கூடாரம் அமைத்து, கத்தி போன்ற இரும்பு பொருட்களை மிகவும் நேர்த்தியாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் 3 நாட்களுக்கு மேல் ஒரே ஊரில் இருப்பதில்லை எனவும், வெவ்வேறு ஊர்களுக்கு குடும்பமாக சென்று பட்டறை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் வடமாநிலத்தவர்கள் நடத்தும் கொள்ளுப்பட்டறை!
