தென் ஆப்பிரிக்காவில் லாரி டயர் வெடித்த விபத்தில் 27 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் லாரியின் டயர் வெடித்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற பேருந்து, டாக்சி மற்றும் சில வாகனங்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணாம் செய்த 27 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து விபத்து நடந்த இடத்துக்கு சென்ற அந்நாட்டு காவல் துறையினர் போக்குவரத்தை சீரமைத்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சாலை விபத்தில் சிக்கி பலியானது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version