ஜல் சக்தி என்ற புதிய அமைச்சகத்தின் கீழ், தேசிய நதிகள் பாதுகாப்பு மையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான நீர் சார்ந்த பிரச்சனைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தேசிய நதிகள் பாதுகாப்பு மையம் இயங்கி வந்தது. இந்த அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் இருந்து, ஜல் சக்தி என்ற தனித்துறையின் கீழ், இனி தனியாக நிர்வகிக்கப்படயிருக்கிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் சீர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டவிதிமுறை திருத்தம், மத்திய செயலர்களின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 15 மாநிலங்களில் கங்கா மற்றும் அதன் கிளை நதிகள் இல்லாத, 33 நதிகளை 4 ஆயிரத்து 801 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்க திட்டமிட்டுள்ளனர்.