மூலப் பொருள் விலை உயராதபோது, கம்பி மற்றும் சிமெண்ட் விலை மட்டும் ஏன் உயருகிறது ?

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அதன் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருப்பது, வெறும் கண்துடைப்பு என சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும், கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் தமிழக அரசிடம் முன் வைத்துள்ளது. மேலும், கம்பி மற்றும் சிமெண்ட் விலையை குறைக்க உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயராதபோது, கம்பி மற்றும் சிமெண்ட் விலை மட்டும் ஏன் உயருகிறது என்று, கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய குழுவைஅமைப்பது மட்டுமே தீர்வு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version