கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் ரிசார்ட்டுகளில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சுமார் 160க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்துடன், உரிமையாளர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தனியார் தங்கும் விடுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும், அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.