மீன்பிடிக்கும் பெண்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்வேறு சிரமங்களுக்கிடையே கடலுக்கு செல்லும் பெண் மீனவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே உள்ள சடைமுனியன்வலசை, பிச்சைமுப்பன்வலசை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள பெண்கள் கடலுக்கு சென்று கூண்டுவைத்து மீன் பிடித்து வருகின்றனர். குறிப்பாக இஞ்சின் பொருத்தப்படாத படகுகள் மூலம் கடலில் பாசி, மீன், நண்டு, கனவாய் இறால் உள்ளிட்டவற்றை பிடித்து விற்பனை செய்கின்றனர். இந்தநிலையில் மீன்பிடிக்கும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version