மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி சுமதி வாசுதேவ் கோரிக்கை

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவர்கள், அந்நாட்டின் சட்டத்திட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி சுமதி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற, உலக புலம்பெயர் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அயல்நாடுகளில் குடிபெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு அதிகாரி சுமதி வாசுதேவ் மற்றும் ஸ்பெயின் நாட்டு தூதரக அதிகாரி ஆண்டனி லோபோ ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சுமதி வாசுதேவ், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவர்கள், அரசால் அங்கீகாரம் பெற்றுள்ள முகவர்கள் மூலமாக செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல, லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்றும் சுமதி வாசுதேவ் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை வெளியுறவுத் துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்தால் அந்த நிறுவனம், முகவர்கள் குறித்த முழு விவரங்களையும் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கிய பின் வெளிநாடு செல்லலாம் என்றும் சுமதி வாசுதேவ் தெரிவித்தார்.

Exit mobile version