கைத்தறித் துணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 5% சரக்கு சேவை வரியால் தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வரி விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோவை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தறியில் நெய்யப்படும் துணி வகைகளுக்கு 5% சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணியின் விலை அதிகரித்துள்ளதால் முன்பைவிட விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் கைத்தறித் துணிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.