பாலியல் தொந்தரவு குறித்து தபால் அட்டையில் புகாரளிக்கலாம் – பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

பள்ளி தொடங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தின் அருகில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறையினர் சார்பில் பாலியல் தொந்தரவுகளிலிருந்து பெண்களை காப்பாற்றும் நோக்கும் தபால் அட்டைகள் வழங்கும் புதிய முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகள், அவர்கள் கண்களுக்கும், காதுகளுக்கு எட்டும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்களை இந்த முகவரி எழுதப்பட்ட தபால் அட்டை மூலமாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான செயல்கள் மற்றும் குற்றங்கள் தடுக்க வாய்ப்புள்ளதாகவும், இத்திட்டம் மாவட்ட முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் விக்ரமன் தெரிவித்தார்.

Exit mobile version