திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசாருடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
வந்தவாசி பஜார் சாலை பகுதிகளில் கடை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் போலீசாருடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.