ரேசன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலர் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதியாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவை ஏற்று ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.