பல பெண்களுடன் தொடர்பு: கணவன் மீது மனைவி புகார்

தஞ்சை அருகே கணவன் பல பெண்களுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோவை கண்டுபிடித்து, அவரது மனைவியே காவல்நிலையதில் புகார் அளித்திருப்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் 36 வயதான எட்வின் ஜெயக்குமார். விராலிமலை இந்தியன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சையை சேர்ந்த 32 வயதான தாட்சர் என்பவருக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்தே கணவனின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட ஆரம்பித்தது. காரணம் மணிக்கணக்கில் பல பெண்களுடன் இரவு நேரத்தில் எட்வின் தொலைபேசியில் பேசி வந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த மனைவி எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை அவர் இல்லாத நேரத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

அந்த போனில் பல பெண்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருப்பது போன்ற காட்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாட்சர் அவரது மாமியார் மற்றும் நாத்தனார் மற்றும் உறவினர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தனது கணவரிடம் நேரடியாக சென்று செல்போனில் இருக்கும் ஆபாச படங்கள் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் எட்வின் ஜெய்குமாரோ இது தொடர்பாக இனிமேல் என்னிடம்  பேசினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று  மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தாட்சர் தனது கணவனின் கீழ்த்தரமான செயல்பாடுகள் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் எட்வின் ஜெயக்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருடைய தாய், சகோதரி, உறவுக்கார பெண் மற்றும் எட்வின் ஜெயக்குமாருடன் வங்கியில் வேலை பார்த்து வரும் தேவிபிலோமினா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் எட்வின் ஜெயக்குமாரும் அவருடைய உறவினர்களும் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் தற்போது அவரது முன் ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய காவல்துரையினர்க்கு  உத்தரவு பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம். இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையின் தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version