திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 500க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டனர்.
காங்கேயம் – தாராபுரம் சாலையில் உள்ள குதிரை பள்ளம் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பந்தய தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்த ஜோடி மாடுகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். காங்கேயத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.