திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளின் மறுவாழ்விற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள தையலகத்தை சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்து நானூறு தண்டனைக் கைதிகளும் 400 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். இங்கு கைதிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிறை வளாகத்தில் பேக்கரி மற்றும் காய்கரி அங்காடி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் தற்போது கைதிகளை டெய்லர்களாகக் கொண்ட புதிய தையலகமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தையலகத்தில் வெளியில் உள்ளதைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் தமிழக அரசின் முயற்சியால் இந்த ஆண்டு 61 சிறைக் கைதிகள் பொதுத் தேர்வு எழுத உள்ளதாகவும் தெரிவித்தனர்.