நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் டாஸ்மாக் : அக்ரிமெண்ட் முடிந்த பின்னும் காலி செய்ய மறுப்பு

தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் , பெரும்பாலும் சொந்த கட்டடங்கள் கிடையாது. அதுனால ஒதுக்குப்புறமா ஒரு எடத்தை வாடகைக்கு எடுத்து கடை நடத்துவாங்க. இதுல என்ன சிக்கல்னா, கடை நடத்துற டாஸ்மாக் நிர்வாகம் ஆக்கிரமிப்புல ஈடுபடுறதா புகார் வர ஆரம்பிச்சுருக்கு.கடலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவரு சுப்பிரமணியன். 5 வருசத்துக்கு முன்னாடி டாஸ்மாக் நிர்வாகம், இவருக்கு சொந்தமான இடத்துல கடை நடத்திக்கிறோம்னு கேட்ருக்கு.3 வருசத்துக்கு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம் அது முடிஞ்சவுடனே நீங்க இடத்தை காலி பண்ணிகிடனும்னு சுப்பிரமணியன் சொல்லிருக்காரு.

3 வருசம் கழிச்சு, அதான் எல்லாம் முடிஞ்சுதுள்ள கௌம்புங்க அப்டின்ருக்காரு சுப்பிரமணி. கொஞ்சம் பொருங்க 6 மாசம் கழிச்சு பாத்துகலாம்னு நிர்வாகம் சொல்லிருக்கு. 6 மாசம் கழிச்சு மறுபடியும் போய் கேட்டப்போ பாக்கலாம். பாக்கலாம்னு மெத்தன போக்குல தலையாட்டிருக்கு நிர்வாகம். இப்டியே பல காலமா “இன்று போய் நாளை வா”-ன்னு அலையவிட்ருக்கு நிர்வாகம். இது சம்பந்தமா சுப்பிரமணியும் பல தடவை மாவட்ட ஆட்சியர்கிட்டயும், டாஸ்மாக் நிர்வாகத்துகிட்டயும் மனு கொடுத்து பாத்துட்டாரு ஒன்னும் வேலைக்கு ஆகல. சுப்பிரமணிய நிலத்துல டாஸ்மாக கடை இருக்கறதால, அவரு பையனுக்கு யாரும் பொண்ணு தரமாட்டிகிறாங்க.

டாஸ்மாக் நிர்வாகம் இப்போ அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டுல இருக்கு. கரூர் கம்பெணினா சும்மாவா. எப்டியும் இடத்தை புடுங்கிட்டுதான் விடுவாங்க அதுக்குள்ள இடத்தை காப்பத்திக்கங்க அப்டின்னு விசயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.

டாஸ்மாக்-னால பையனுக்கு கல்யாணம் நடக்கலன்னா, கன்னிப் பையன் சாபம் சும்மாவிடாதுன்ற உண்மையை டாஸ்மாக் நிர்வாகம் புரிஞ்சுக்கனும்.

Exit mobile version