ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன மேலாளர் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மீட்பு

ரயிலில் பயணம் மேற்கொண்ட போது தவறவிட்ட ஐந்தரை லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொண்ட பைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிவரும் ஜெகன் என்பவர் குடும்பத்துடன் தம்பரத்தில் இருந்து நெல்லை விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்பொது ஐந்தரை லட்சம் மதிப்புள்ள 20 சவரன் நகைகள், ஒரு மடிக்கணிணி, இரண்டு செல்போன், இரண்டாயிரம் பணம் ஆகியவை இருந்த பைகளை நடைமேடையில் விட்டு சென்றதாக ரயில்வே பாதுகாப்பு படை அவசர எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொருட்கள் இருந்த பையை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

Exit mobile version