விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி செயற்கைக்கோள்

அதிநவீன புகைப்பட சாதனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட ரிசாட் 2பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்கள் 30 நொடிகளில் தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து படிப்படியாக தூரம் அதிகரிக்கப்பட்டு அதிகபட்ச உயரத்தில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் தூண்டும் விதமாக முதன்முறையாக 1000 மாணவர்களுக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ரிசாட் 2பி செயற்கைகோள் மூலம் மேகமூட்டமான காலத்திலும் புவியின் மேற்பரப்பை தெளிவாக படம் பிடிக்க முடியும். இதற்கான உயர்தொழில்நுட்பங்கள் மற்றும்அதிநவீன புகைப்பட சாதனங்கள் ரிசாட் 2பி செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளன. 

Exit mobile version