பொங்கல் பரிசுத் தொகையில் ஊழல் செய்த ரேஷன் கடை ஊழியர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டு மூலம் பொங்கல் பரிசுத் தொகையில் ஊழல் செய்ததாக ரேஷன் கடை ஊழியர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல், புது நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் பழனியாண்டவர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, குமரேசன் போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டு மூலம் கையாடல் செய்து வெளி மார்க்கெட்டில் விற்று ஆதாயம் அடைவதாக அவரது மனைவி ரங்கநாயகி புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version