அண்ணன், தம்பி இருவருடனும் கை கோர்க்கும் பிரபல நடிகை..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஹரி- சூர்யா கூட்டணி என்று சொன்னால்  நாம் நியாபகத்துக்கு வருவது சிங்கம் என்ற பெயர்தான். ஆம்.சிங்கம் படத்தின் மூலம் அவர் உருவாக்கிய துரைசிங்கம் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இருவரும்   கூட்டணி  போடுவது சிங்கம் நான்காம் பாகத்திற்காகவா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் படக்குழுவினர் இது வேறு கதை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவோடு தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கைகோர்க்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். தம்பியை தொடர்ந்து அண்ணன் உடனும் விரைவில் ராஷ்மிகா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version