சூரிய குடும்பத்தைப் பொறுத்தவரை அதன் சுற்றுவட்டப்பாதையில் பெரிய கோள்களிலிருந்து சிறிய கோள்கள் வரையும் சுற்றுகின்றன. மேலும் தூசிகள் மற்றும் கண்ணிற்கு புலப்படாத சின்னச் சின்ன பொருட்களும் சுற்றுவட்டபாதையில் வலம் வருகின்றன. அப்படி வலம் வருபவைகளில் சிலவை பூமியை நோக்கி வருகின்றன. அவற்றில் மனிதர்களின் கண்களை கவரும் விதமாகவும் வியப்பினை தருவதாகவும் இருப்பது வால் நட்சத்திரங்கள் ஆகும். கடந்த 2020ஆம் ஆண்டில் நியோ வைஸ் என்கிற வால்நடத்திரம் பூமியை நோக்கி வந்தது குறிப்பிடதக்கது. அதற்கு பிறகு தற்போது ஒரு பச்சை வால் நட்சத்திரம் வர உள்ளது. இது 50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய வால் நடத்திரம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள் இதனை மனிதர்கள் சாதாரண கண்களிலும் காணலாம் என்று சொல்லப்படுகிறது.
வியாழன் கோளின் சுற்றுவட்டபாதையில் “சி/2022 இ3[இசட்.டி.எஃப்]” என்ற வால்நடத்திரத்திரம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை விஞ்ஞானிகள் மார்ச் 2 ஆம் தேதி கண்டுபிடித்தனர். தற்போது இந்த வால் நட்சத்திரம் தான் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பூமியை நோக்கி வரவுள்ளது. சுமார் 4.2கோடி கி.மீட்டர் வேகத்தில் இந்த வால் நட்சத்திரமானது பூமியை நோக்கி அருகில் வந்து பின் கடந்து செல்லும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனை வெறும் கண்களால் பார்த்தால் பச்சை வண்ணத்தில் தெரியும் என்றும் தொலை நோக்கியினைப் பயன்படுத்திப் பார்த்தால் அதன் வால் நட்சத்திரத்தின் அசைவினைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.