இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

பெரும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்.

அக்டோபர் 26-ம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இலங்கையில் அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறின. பெரும்பான்மையை நிரூபிப்பதில் ராஜபக்சே இரண்டு முறை தோல்வியை தழுவினார். இறுதியாக உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியதை தொடர்ந்து, தனது பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் அவர் தான் இலங்கையில் அடுத்த பிரதமராக பதவியேற்கும் சூழல் உருவானது. இந்தநிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் 5 எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரணில் பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையில் 50 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Exit mobile version