7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்

புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானதைஅடுத்து கடந்த 12ஆம் தேதி
ராமேஸ்வரத்தில் புயல்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஆந்திர கரையோரம் புயல் கரையை கடந்தது. புயல் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டத்தையடுத்து ராமேஸ்வரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்.

கடந்த 7 நாட்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் இன்று அதிக மீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடலுக்குள் செல்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version