படகுக்கு ரூ. 500 நிவாரணம் கொடுக்க தீர்மானம் – ராமேஸ்வரம் மீன்வர்கள் அறிவிப்பு 

படகு ஒன்றிற்கு 500 ரூபாய் வீதம் வசூலித்து கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக ராமேஸ்வரம் மீன்வர்கள் கூறியுள்ளனர்.

கரையை கடந்த கஜா புயல், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்நிலையில், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பத்திரமாக கரைதிரும்பினர்.

இதைத் தொடர்ந்து, இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய மீனவர்கள், அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதோடு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள படகு ஒன்றுக்கு ரூ. 500 வீதம் வசூலித்து தஞ்சை டெல்டா நிவாரணத்துக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக அவர்கள் கூறினர். அங்கு சுமார் 1200 படகுகள் உள்ளதும், அதன்படி 6 லட்சம் ரூபாய் நிவாரணம் வசூலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version