இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரி கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய இதிகாசங்களில் முக்கியமான இதிகாசமாக இராமாயணம் திகழ்கிறது. இந்த இதிகாசத் தகவலின்படி, இராமபிரான் சீதையை இராவனணிடமிருந்து மீட்டு வருவதற்காக கட்டப்பட்டதே இராமர் பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாகத் தான் இராமர் இலங்கைத் தீவினை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இராமர் இந்து மக்களின் புனிதக் கடவுளாக அழைக்கப்படுகிறார். அவர் கட்டிய இந்த இராமர் பாலமானது இந்து மக்களின் பிரசித்திப்பெற்ற புனித தலமாக சொல்லப்படுகிறது.
சுப்ரமணியசுவாமி தொடர்ந்த இந்த வழக்கில் மத்திய அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் என்னென்ன செயல்முறை மற்றும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான நிலை அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டப்பட்டிருந்தது.
தற்போது உச்சநீதிமன்றம், சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த இடையீட்டு மனு மற்றும் இராமர் பாலம் விவகாரம் குறித்த அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையும் முடித்து வைத்தது