மேற்கு வங்க மாநிலம் மூர்சிதாபாத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்துடன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வமாகச் சென்றனர். மூர்சிதாபாத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரும் ஆசிரியருமான பந்து பிரகாஷ் பால், அவர் மனைவி, எட்டு வயது மகன் ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மூவர் கொலையைக் கண்டித்து மூர்சிதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.