மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டிருப்பதற்காகவும், உழலை தடுப்பதற்காகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், இச்சட்டத்தை முறையாக பயன்படுத்தி அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 19-ம் தேதி, பல்வேறு கட்சிகள் எதிர்ப்புகளை மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்த போது, மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அதை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version