தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துடன் ரஜினி, ஸ்டாலின் சந்திப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக, சிகிக்கைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். இதைத் தொடர்ந்து, இன்று அவரது சாலிகிராமம் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்தித்து பேசினர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்த்தை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய ஸ்டாலின், விஜயகாந்த்திடம் அரசியல் குறித்து பேசவில்லை என்றும் உடல் நலம் குறித்து மட்டுமே விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

Exit mobile version