ராஜஸ்தானைச் சேர்ந்த பாயல் ஜாங்கிட் என்கிற பெண்ணுக்கு, மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருதை பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அப்போது குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமண முறை ஆகியவற்றுக்கு எதிராகப் பாடுபட்டதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த பாயல் ஜாங்கிட் என்கிற பெண்ணுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருது வழங்கப்பட்டது.
குழந்தைப் பருவத்தில் இருந்தபோது தனக்கு நடக்க இருந்த திருமணத்தை எதிர்த்து நிறுத்தியதுடன், அருகில் உள்ள ஊர்களிலும் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
விருது பெற்ற பாயல் ஜாங்கிட்டுக்கு நோபல் பரிசு பெற்ற கைலாஸ் சத்யார்த்தி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.