இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றார்-சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.களுக்கு ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிபர் சிறிசேனா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 26-ம் தேதி ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. இதனையடுத்து இருமுறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இந்தநிலையில், தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த சிறிசேனா, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பிகளுக்கு ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். சில எம்.பிக்கள் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதால் அந்த தொகையை ராஜபக்சேவால் கொடுக்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், பேரம் வெற்றிகரமாக முடிந்திருந்தால் பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபித்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

 

Exit mobile version