அதென்ன ராஜன் வழக்கு? எமெர்ஜென்ஸி தெரிஞ்சவங்க இதையும் தெரிஞ்சுக்கணும்

இந்தியாவின் இருண்டகாலம் என்று பிரிட்டிஷ் ஆட்சியைச் சொல்வதுண்டு. ஆனால், சுதந்திர இந்தியாவின் இருண்டகாலம் என்றால் சந்தேகத்துக்கு இடமின்றி அது எமெர்ஜென்ஸி காலகட்டம்தான். 1975ஆம் ஆண்டு ஜூன் 25 இதே நாளில்தான் அந்த ஜனநாயகப் படுகொலை அதிகாரப்பூர்வமாக அரங்கேறத் தொடங்கியது. 

இந்திய நீதித்துறை வரலாற்றில் நெருக்கடி காலகட்டம் ஒரு நெருப்பாற்றுக் காலம் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பதுண்டு. அப்படியான வழக்குகளில் கவனிக்கப்பட வேண்டிய வழக்குதான் ராஜன் வழக்கு. 

நெருக்கடி நிலைப் பிரகடனக் காலகட்டத்தில், தவறுதலாகப் பெயர்க்குழப்பத்தால் மாற்றி அழைத்துச் செல்லப்பட்ட ராஜன் எனும் கேரளாவின் கோழிக்கோட்டு பகுதி மாணவரின் கொலையைப் பற்றிய வழக்கு. 

நெருக்கடி நிலை முடிந்த பின்னரும் தனது மகன் உயிரோடு உள்ளாரா, இல்லையா எனத் தெரியாத நிலையில் ராஜனின் தந்தை வழக்கு தொடர்ந்தார். கடைசி வரையிலும் மகன் கிடைக்கவேயில்லை.

 

பதிவுகள்:

இவரது கசப்பான அனுபவங்களையும், அரசியல் மற்றும் காவல்துறையினரிடம் அணுகியபோது இவர் பெற நேர்ந்த பதில்களையும் மகனைக் குறித்த தகவல்களைத் தேடிய ஒரு தந்தையாக இவர் எழுதி “தந்தையின் நினைவுகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மலையாள எழுத்தாளர் ஓமனக்குட்டன் இந்த சம்பவத்தின் குரூரத்தை விளக்கும் விதமாக ஷவந்தீனிகள் (பிணம்தின்னிகள்) என்ற நூலையும் எழுதினார். 
இந்த ராஜன் வழக்கைத் தழுவி எடுக்கப்பட்ட ’பிறவி’ எனும் 1989 ஆம் ஆண்டின் மலையாளத் திரைப்படம் தொலைந்த மகனைத் தேடும் தந்தையின் காயங்களை வெளிப்படுத்தியது. இத்திரைப்படம் உலகளவில் மொத்தத்தில் 31 விருதுகள் பெற்றது.

 

Exit mobile version