ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சென்ட்ரலில் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தக்‌ஷன் ரயில்வே கார்மிக் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக, ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், இதுபோன்று மொத்தம் 13 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version