பிரசித்திபெற்ற திருநெல்லி கோயிலில் ராகுல்காந்தி சாமிதரிசனம்

கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநெல்லி கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார்.

உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல், தான் போட்டியிடும் தொகுதிகளிலும் தனி கவனத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வயநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, திருநெல்லியில் சாமி தரிசனம் செய்தார். பிரம்மகிரி மலையில் அமைந்துள்ள திருநெல்லி கோயிலின் மலைப்பாதையில் பாரம்பரிய உடையுடன் நடந்து சென்று அவர் வழிபாடு நடத்தினார்.

Exit mobile version