பாரம்பரியமான தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவிய ராகுல் காந்தி

அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியைத் தழுவினார். ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட, பாஜக வேட்பாளர் ஸ்மிருதிஇரானி ராகுல் காந்தியை விட 47 ஆயிரத்து 558 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக கருதப்படும் அமேதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவுவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வெற்றியை பறிகொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் வெற்றி பெற்றுள்ளார்.அங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனீரை விட, சுமார் 4 லட்சத்து 31ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.வயநாடு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 65 சதவீத வாக்குகளை ராகுல் காந்தி பெற்றுள்ளார்

Exit mobile version