ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.
பணமதிப்பிழப்பு குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் சுப்ரமணியன், இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் அப்போது ஏன் பதவி விலகவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.