பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள ரபேல் போர் விமானங்களின் வீடியோ காட்சிகள் வெளியீடு

பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள ரபேல் போர் விமானங்களின் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பாஜ அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய இணைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜ அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமானங்களின் வீடியோ பதிவுகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன. பிரான்சின் இஸ்த்ரே லே டியூப் விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

 

Exit mobile version