சர்வதேச வானொலி தினத்தையொட்டி கோவையில் இளைஞர் ஒருவர் நடத்திய ரேடியோ கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
பழைய பொருட்கள் சேகரிப்பாளரான அபுதாகிர் என்பவர் இந்த கண்காட்சியை நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளரிடம் பேசிய அவர், பழங்கால பொருட்களை தான் சேகரித்து வருவதாகவும் அதில் ரேடியோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். 1929 முதல் 1942 ஆம் ஆண்டு வரை தலைநகரங்களில் மட்டுமே ரேடியோக்கள் இருந்து வந்ததாகவும், அதன் பிறகே பொதுமக்களின் பயன்பாட்டு வந்ததாகவும் கூறினார்.
இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ரேடியோக்கள் இடம் பெற்றுள்ளன.