மீண்டும் “மன்கட்” அவுட் : வீரர்களுக்கு அஸ்வின் எச்சரிக்கை

ஐபிஎல் தொடரில் நான் பந்துவீசும் போது  பேட்ஸ்மேன்கள்,  கிரீஸை விட்டு வெளியே சென்றால் மீண்டும் மன்கட் முறையில் ரன்அவுட் செய்வேன் என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டனாக இருந்த அஸ்வின், ராஜஸ்தான் அணியுடனான லீக் போட்டியில்  13-வது ஓவரை  வீசினார். அப்போது பவுலிங் செய்வது போல ஆக்‌ஷன் காட்டிய அவர், அருகாமையில் தன் முனையில் நின்றிருந்த ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயலை, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், வரும் ஐபிஎல் தொடரிலும் நான் பந்துவீசும் போது யாராவது கிரீஸை விட்டு வெளியேறினால், மன்கட் முறையில் ரன்அவுட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த அஸ்வினிடம், ரசிகர் ஒருவர் இந்த முறையும் மன்கட் ரன் அவுட் முறையை  பின்பற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, நான் பந்துவீசும் போது கிரீசுக்கு வெளியில் நின்றிருந்தால் கண்டிப்பாக மன்கட் முறையில் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version