பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்று, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில், நான்கு கதாநாயகிகளுடன் உருவாகிறது.
பொதுவாக, ஒரு மொழியில் சூப்பர் ஹிட் ஆகும் திரைப்படங்களை, வேறு ஒரு மொழியில் எடுப்பது வழக்கம். ஆனால், பாலிவுட்டில் 2014 ஆண்டு, கங்கனா ரணாவட் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படம், நான்கு மொழிகளில், நான்கு வெவ்வேறு ஹீரோயின்களுடன் உருவாகிறது.
அந்த நான்கு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், பாரிஸ் பாரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கில், திஸ் இஸ் மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், தமண்ணா கதாநாயகியாகிறார்.
மலையாளத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகும் இந்த படத்திற்கு ஜம் ஜம் என்று பெயரிட்டுள்ளனர்.
கன்னடத்தில் பட்டர்ஃப்ளை என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் பாருள் யாதவ் நாயகியாக நடிக்கிறார்.
பாலிவுட்டில் குயின் திரைப்படம் பெற்ற வரவேற்பும், நடத்திய வசூல் வேட்டையையும், இந்த நான்கு திரைப்படங்களுக்கும் கிடைக்குமா என்பதை பார்க்கலாம்.