புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் தேடப்பட்டு வந்த வங்கி ஊழியர் மாரிமுத்து மணல்மேல்குடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து, வங்கியில் இருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தரக் கோரி மாரிமுத்துவின் மனைவியும் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் மணல்மேல்குடியில் அழுகிய நிலையில் மாரிமுத்துவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரிமுத்துவுடன் வேறொரு பெண்ணுக்கும் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?, காணாமால் போன நகைகள் என்ன ஆனது என்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.