மதுரை மாவட்டம் கச்சைகட்டியில் உள்ள புதுக்குளம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ், தூர்வாரப்பட்டதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
குட்லாடம்பட்டி அருகே உள்ள புதுக்குளம் கண்மாயினால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் முட்புதர்கள் மண்டி கிடந்த இந்த கண்மாய், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 55 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டது. இதனை தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்ததால் கண்மாய் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அரசிற்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர்.