பிரான்ஸ்-ஜெர்மனி இடையே இருந்த நீண்டகால பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 1963ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் லேசர் கலைநிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். இதுபோன்ற மேற்கத்திய கலாச்சார கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு துணைத்தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எலிசி ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் லேசர் கலை நிகழ்ச்சி
-
By Web Team
- Categories: இந்தியா, தமிழ்நாடு
- Tags: #PondicheeryCelebrationElyséefrenchGerman
Related Content
அதிமுக பொதுக்கூட்டங்களின் விபரம் வெளியீடு
By
Web team
March 4, 2023
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா இளைஞர்கள் !
By
Web team
February 10, 2023
புதுச்சேரியில் வீட்டில் மர்ம பொருள் வெடித்து விபத்து!
By
Web team
February 7, 2023
மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !
By
Web team
February 6, 2023
ஆரோவில் நகரத்தை சுற்றிப் பார்த்த ஜி-20 பிரதிநிதிகள் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்!
By
Web team
February 1, 2023