புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு விவரங்களை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துரைத்தார். மச்சுவாடி, மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலின் போது உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அளித்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.

Exit mobile version