சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறங்காவலர் ஸ்ரீனிவாசன் எழுதிய Preserving Antiquity for Posterity என்ற நூலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் ஸ்ரீனிவாசன் எழுதிய Preserving Antiquity for Posterity என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர், பல நூற்றாண்டுகளாக நம்முடைய மரபுகளின் அடையாளமாகவும், தென்னிந்திய வைணவக் கோயில்களில் குறிப்பிடத்தகுந்த கோயிலாகவும் ஸ்ரீரங்கம் விளங்குவதாக தெரிவித்தார்.