அரியலூரில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கல்விச் சீராக வழங்கினர். அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். இந்தப் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் கல்விச்சீர் வழங்கும் விழா கொண்டாடப்பட்டது.
இதனையத்து சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான டிவி, நாற்காலிகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை மாணவர்களுக்கு கல்விச் சீராக வழங்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க தாங்கள் எடுத்து வந்த பொருள்களை ஆசிரியர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்.
Discussion about this post