திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி வழங்கப்படுவதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 579 முழு நேர நியாய விலைக்கடைகளும், 142 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 291 குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளின் மூலம் குடிமை பொருள்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நியாய விலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் தமிழக அரசு வழங்க கூடிய அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அனைத்து மளிகை பொருள்களும் தட்டுப்பாடு இல்லாமலும், சரியான அளவுகளிலும் வழங்கப்படுவதால் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.