நாகை மாவட்டத்திற்குட்பட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் விலையில்லா குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் துவக்கி வைத்தார்.
நாகை மாவட்டம் குத்தாலம், செம்பியன்நதி, நரிமணம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் கார்டு மூலம் நாளொன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு 20 லிட்டர் விலையில்லா தானியங்கி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் Any Time water இயந்திரத்தை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் தண்ணீர் பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடியும் என ONGC நிறுவனத்தினர் தெரிவித்தனர்.