நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நெல்லையில் நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தில் இருந்து, கொள்ளம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களான நஞ்சை, புஞ்சை என 2000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.

எனவே, நான்கு வழிச்சாலையை மாற்று வழியில் ஏற்படுத்த வேண்டும் என கோரி, விவசாய சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்தார். மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version