குறைந்த நீரில் அதிக மகசூல் கிடைக்கும் புதினா, கொத்தமல்லி கீரைகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்த சுற்று வட்டார பகுதிகளான புது கொளப்பாபட்டு, தேவனுர் உள்ளிட்ட கிராமத்தில் பல ஏக்கரில் புதினா, கொத்தமல்லி கீரைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 5 நாட்கள் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி, ரசாயன உரம் இல்லாமல் இயற்கை முறையில் புதினா, கொத்தமல்லி அறுவடை செய்து வருகின்றனர். ஒரு கட்டு கீரை 10 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.