திருவாரூர் அருகே மூலங்குடியில் வசிக்கும் தம்பதியர், தங்கள் வீட்டிலேயே பஞ்சகவியா மற்றும் நுண்ணுயிர் உரங்களை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
குடவாசல் வட்டம், மூலங்குடியில் வசிக்கின்றனர் அசோகன்- விஜயா தம்பதியர். இவர்கள் நாட்டு பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் மற்றும் கரும்பு சாறு, வாழைப்பழம், இளநீர், போன்ற பொருட்களை கலந்து பஞ்சகாவியம் தயாரிக்கின்றனர். பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பஞ்சகாவியாவை வயலுக்கு தெளித்தால், மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் எனக் கூறுகின்றனர்.
தழைசத்து, மணிசத்து, சாம்பல் சத்து இவை அனைத்தும் அதில் உள்ளது என்பதால் விவசாயத்திற்கு இதனையே பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.